Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 14-செப்-2017

ரெஸ்ட் எடுக்குறேனுங்க.....! : வால்பாறை நகரில் நெடுஞ்சாலையில் கால்நடைகளை ஹாயாக ஒய்வெடுப்பதால் போக்குவரத்து பாதிக்கிறது.
குமுறல்....! : இரை தேடப் போயிட்டு கூடு திரும்பினா கூட்டையும் காணோம் கூடு இருந்த மரத்தையும் காணோம். ஏற்கனவே எங்க இனத்தொகை கொறஞ்சுபோச்சு இப்படி மரங்கள வெட்டி தள்ளுனா இனிமே இல்லாம போயிரும் செம்போத்து பறவை மனம் குமுறிய இடம் செல்லமுத்து நகர், ஜமீன் ஊத்துக்குளி பொள்ளாச்சி.
வந்துட்டோம்...! : பந்தலூர் அருகே கூவமூலா கிராமத்தை ஒட்டிய மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள்.
நிரம்பி வருதே..! : தொடர் மழையால் பழநி ஆயக்குடி அருகே பெரியகுளம் நிரம்பி வருகிறது.
வர்ணஜாலம்...! : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் நேற்று அதிகாலை வானில் தெரிந்த வானவில்.
வென்றிடுவோம்...! : திண்டுக்கல் எஸ்எஸ்எம் பொறியியல் கல்லுாரியில் நடந்த பாலம் கட்டும் போட்டியில் பங்கேற்ற சிவில் பாடப்பிரிவு மாணவிகள்.
ஜாலி.டோய்...! : காலாண்டுதேர்வு எழுதி விட்டு வந்த மகிழ்ச்சியில் தண்ணீரில் குதித்து விளையாடும் சிறுவர்கள். இடம்: உடுமலை பள்ளபாளையம் பி.ஏ.பி., கால்வாய்
குடைக்குள் செல்பி...! : கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஜக்கோ - ஜியோ அனுப்பினர் நடத்திய தர்ணா போராட்டத்தில் செல்பி எடுத்துக் கொண்ட அரசு ஆசிரியர்கள்
அதிகரிக்குது...! : நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணைக்கு தண்ணீணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 75 அடியை எட்டியுள்ளது.
ரம்மியம்...! : பரந்து விரிந்த பச்சை வயலுக்கு மகுடம் வைத்தது போல் ரம்மியமாக காட்சி அளிக்கும் மேக கூட்டங்கள். இடம்: புதுச்சேரி ஏம்பலம்.
 
Advertisement