Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 13-செப்-2017

ஆரம்புச்சுட்டோம்ல...! : விவசாய துறையில் நவீன எந்திரங்கள் வந்தாலும், மாடுகள் பூட்டி உழுது, மக்காச்சோளம் விதைக்கும் விவசாயிகள். இடம்: பழநி அருகே கணக்கன்பட்டி. திண்டுக்கல்.
வந்துருச்சு...! : பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கிளை வாய்க்காலில் செல்கிறது. இடம் .உடுமலை அருகே சோமவாரபட்டி.
பாலருவியோ...! : கோவையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் ஒண்டிபுதூரை அடுத்த பட்டணம்புதூர் நொய்யல் தடுப்பணையில் நீர் நிறைந்து வழியத்துடங்கியுள்ளது.
வித விதமாய்..! : நவராத்திரி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி திண்டுக்கல் காந்தி கிராம கதர் அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விதவிதமான கொலு பொம்மைகள்.
கொட்டுதே...! : பழநி-கொடைக்கானல் ரோடு வட்டமலை அருகே கொட்டும் நீர்வீழ்ச்சி
உற்சாக செல்பி...! : ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செல்பி எடுத்துக் கொண்ட பெண் ஊழியர்கள் . இடம் .மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுர்.
காத்திருக்குதோ...! : கருமேக கூட்டம் மழை பெய்ய காத்திருக்கிறதோ ? இடம்: திண்டுக்கல் சின்னாளப்பட்டி.
இரை தேடிப்போறேன்...! : இரையை நோக்கி சிறகடித்து பறக்கும் புறா.இடம்: சிவகங்கை.
நல்லா விளைஞ்சுருக்கே.! : அவ்வப்போது பெய்துவரும் மழையால் நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்து அப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது.இடம்: சிவகங்கை அருகே மேல வாணியங்குடி.
பூத்து குலுங்கும் பூக்கள் . : புதுச்சேரி -திண்டிவனம் நான்கு வழி சாலையில் தற்போது பெய்து வரும் மழையால் பூத்து குலுங்கும் பூக்கள்
 
Advertisement