Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 17-ஜூலை-2017

ஆபத்து பயணம்: : வாழைக்காய் ஏற்றி வரும் வாகனத்தில் வீதிகளை மீறிய பயணம் விபத்திற்கு வழிவகுக்கும் என்பதை இவர்கள் மறந்தார்களோ என்னவோ?
நீர் பருகிய ஆடுகள் : பருவமழை பெய்து சிறிதளவே தேங்கிய மழை நீரில் நீர் பருகிய ஆடுகள் இடம்: விருதுநகர் மாவட்டம், ஒண்டிப்புலி கல்குவாரி,
கபடி... கபடி... : காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சேத்தூரில் மாவட்ட அளவிலான கபடிப்போட்டி நடந்தது.
சிறுவர்கள் கிரிக்கெட் : உடுமலை திருமூர்த்தி அணையில், வண்டல் மண் அள்ளிய இடத்தில், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.
மணல் லாரிகள் : பல்லடம் அருகே மலையம்பாளையம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய மணல் லாரிகள்
காட்டு யானைகள் : முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பார்த்தீனியம் செடிகளுக்கு இடையில், உணவு தாவரங்களை தேடும் காட்டு யானைகள்.
தண்ணீர்... தண்ணீர் ... : ஊட்டி அருகே, தேனாடுகம்பை பகுதியில் மழை குறைந்த காரணத்தால், கேரட் விளைச்சல் பாதிக்காமல் இருக்க, ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
மராத்தான் : தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி, கொடிசியாவில் துவங்கிய மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற ஒரு பகுதியினர்.
கார் பந்தயம் : கோவை, செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவேயில், தேசிய அளவிலான கார் பந்தயம் நடந்தது.
பச்சை நிறமே, பச்சை நிறமே...! : வறட்சியின் பிடியில் இருந்த வனப்பகுதிகள், வருண பகவானின் கருணையால், துாரிகை இல்லாத ஓவியம் போல, பசுமை போர்த்திய புல்வெளியாக மாற்றம் பெற்றுள்ளன; கோடை காலத்தில் உணவு கிடைக்காமல் ஊருக்குள் புகுந்த காட்டு யானைக்கு, இந்த இடத்தை விட்ட செல்ல மனம் வருமா...? இடம்: பந்தலுார் அருகே அத்திக்குன்னா வனப்பகுதி.
 
Advertisement