X
Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 21-ஏப்-2017

மதுரை வைகை ஆற்றில் தேங்கிய நீரில் இரை கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளி பறக்கின்றனவோ இப்பறவைகள். இடம்: செல்லூர்.
உடுமலை பெரியகுளத்தில் குறைந்தளவு தண்ணீரில் இரை தேடும் அரிய வகை பறவைகள்.
.காலிகுடங்களுடன் தண்ணீரை தேடி டூவிலரில் அலையும் பொதுமக்கள்..இடம்:சிவகங்கை.

தண்ணீர் தேவை பூர்த்தி செய்ய மழை நீர் சேகரிப்பை ஏற்படுத்தா விட்டால் வறட்சி காலத்தில் இத்தனை குடங்கள் தேவைப்படுமா . இடம்: விரகனூர், மதுரை
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இளநீர் கடையில் விற்பனை களைகட்டியது. இடம்: சிவகங்கை

.அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச்செல்வது விபத்திற்கல்லவா வழிவகுக்கும். இடம்: திண்டுக்கல் .

குடிநீர் தட்டுப்பாட்டால் தண்ணீர் லாரியின் வருகையை எதிர்பார்த்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் குடங்கள். இடம்: மதுரை யானைக் கல்.
திண்டுக்கல் அருகே சிறுநாயக்கன்பட்டியில் பூத்துள்ள செண்டுமல்லி பூக்கள்

மரம் வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு சக்கர வாகனத்தில் பிரச்சாரம் செல்லும் இளைஞர்.. இடம் சென்னை

சுட்டெரிக்கும் வெயிலுக்கு இந்த ஆலம் பழமாவது கிடைத்ததே என்கிறதோ இந்த பறவை. இடம்: சிவகங்கை அருகே இலந்தங்குடிப்பட்டி.

 
Advertisement