Advertisement

குளோபல் ஷாட்: 09-நவ-2018

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் பிரெக்கன்ரிட்ஜ் என்ற இடத்தில் உள்ள பனிச்சறுக்கு ரிசார்ட்டில் பனிச்சறுக்கில் ஈடுபடுகின்றனர்.
வடகொரியாவின் கும்காங் மலைப்பகுதியில் பாறையையொட்டி அமைந்துள்ள நடைபாதையில் நடந்து சென்று இயற்கை அழகை ரசிக்கின்றனர்.
வடகொரியாவின் மவுன்ட் கும்காங்கில் உள்ள கும்கேங்சன் ஹோட்டலின் நுழைவாயிலில் வரையப்பட்டுள்ள இயற்கை ஓவியம்.
நார்வே நாட்டின் ஓய்கார்டன் அருகே ஆயில் டேங்கர் கப்பல் ஒன்றுடன் அந்நாட்டின் மற்றொரு கப்பல் மோதிக் கொண்டது. இதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
அலாஸ்காவின் அகாட்டு தீவுப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ள கடற் சிங்கங்கள்.
ரஷ்யாவின் சென்ட்பீட்டர்ஸ்பெர்கில் நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்து கொண்டு அசத்திய ஜப்பான் வீராங்கனைகள்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் விஸாசிகோன் பள்ளத்தாக்கு பூங்காவில் உள்ள நீர் பாயும் இயற்கை சூழலை வரையும் ஓவியர்.
பெல்ஜியம் நாட்டின் ஜோன்பெக்கேயில் இருபுறமும் உயர்ந்த மரங்கள் சூழ நடுவே அமைந்துள்ள பாதையில் இயற்கை அழகை ரசித்தபடி செல்லும் ஒருவர்.
 
Advertisement