Advertisement

குளோபல் ஷாட்: 11-ஜூன்-2018

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த திருவிழாவில் வண்ணப் பொடிகளை தூவி உற்சாகமாக கொண்டாடினர்.
நியூயார்க் நகரில் அமைந்துள்ள 80 மாடிகள் கொண்ட உலக வர்த்தக மைய கட்டடம்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகில் தன் நாயுடன் வாகிங் செல்லும் பெண்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் லாவண்டர் வயல் வெளியில் நடந்து செல்லும் சிறுவன்.
கனடாவின் லா மால்பேயில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவ், அவரது மனைவி, மற்றும் அர்ஜென்டைனா அதிபர் மவுரிசியோ மாக்ரி, அவரது மனைவி நால்வரும் இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனப்பகுதியை ரசிக்கின்றனர்.
கனடாவின் லா மால்பேயில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டையொட்டி விண்ணில் விடப்பட்ட கண்கவர் வாணவேடிக்கை.
வாஷிங்டன்னில் நடந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆதரவு பேரணியில் வண்ண இறக்கை அணிந்து கலந்து கொண்ட பெண்.
காலிபோர்னியா மாகாணத்தில் மலைகளும் கடலும் சார்ந்த சான்ஓனோபர் கடற்கரையின் அழகிய தோற்றம்.
இங்கிலாந்து ராணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பக்கிங்காம் அரண்மனைக்கு மேலாக வண்ணப்பொடிகளைத் தூவியவாறு விண்ணில் சீறிப்பாய்ந்த விமானங்கள் இடம்: லண்டன்.
 
Advertisement