Advertisement

குளோபல் ஷாட்: 13-பிப்-2018

ரஷ்யாவின் டோமோடிடோவோ விமானநிலையம் அருகே நடந்த விமான விபத்தில் 71 பேர் பலியானார்கள். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கென்யாவின் நய்ரோபி நகரில் முட்டைக்கோசு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெர்மனியின் டூசெல்டோர்பில் நடந்த கார்னிவெல் திருவிழாவின் போது கிளி போன்று வேடம் அணிந்த ஒருவர்.
ஜெர்மனியின் டூசெல்டோர்பில் நடந்த கார்னிவெல் திருவிழாவில் வண்ணமயமான உடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.
காலிபோர்னியா மாகாணத்தின் ஓரோவில்லே அணையை பார்வையிட்ட குழுவினர் நாட்டின் மற்ற அணைகளையும் பராமரிக்க அரசுக்கு பரிந்துரை செய்தனர். சென்ற ஆண்டில் அணையிலிருந்து ஆர்ப்பரித்து வெளியேறிய வெள்ளநீர்.
துபாயில் நடந்த உலக அரசு மாநாட்டின் போது மின்னொளியில் ஜொலித்த பகுதி.
லண்டன் நகரில் தேம்ஸ் ஆற்றில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அருகில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டது.
 
Advertisement