Advertisement

குளோபல் ஷாட்: 12-பிப்-2018

வடகொரியாவுக்கு எதிராக தென்கொரிய தலைநகர் சியோலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருநாடுகளின் இணைப்பை குறிக்கும் கொடியை தீயிட்டு கொளுத்தினர்.
இந்தோனேஷ்ய விமானப் படை விமானஙகள் நேற்று சிங்கப்பூரில் சாகச நிகழ்ச்சியை நடத்தின.
பியோங்சங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஸ்கை ஜம்பிங்கில் கலந்து கொண்ட ருமேனிய வீரர் டேனியலே ஹாராலம்பி.
தென்கொரியாவின் பியோங்சங்கில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியையொட்டி ஆல்பைன் பனிச்சறுக்கு களத்தில் பயிற்சி மேற்கொண்ட பெண் வீராங்கனைகள்.
சீன புத்தாண்டையொட்டி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பென் நகரில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைஞர்கள்.
பெரு நாட்டின் லிமா நகரில் நடந்த நாய்களுக்கான திருமணத்தில் மணக்கோலத்தில் ஒரு நாய்ஜோடி.
பாகிஸ்தான் லாகூர் நகரில் நடந்த இசைத் திருவிழாவில் கலந்து கொண்ட கலைஞர்கள்.
இந்தோனேஷ்யாவில் நடந்த பஸ் விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மொத்தமாக கிழக்கு சிபுடாட் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
பிரேசில் நாட்டின் சாவ்பவ்லோ நகரில் நடந்த கார்னிவெல் திருவிழாவில் வித்தியாசமான வேடம் அணிந்து வந்தனர்.
 
Advertisement