Advertisement

குளோபல் ஷாட்: 07-பிப்-2018

தென்கொரியாவில் வரும் 9-ம் தேதி துவங்கும் குளிர் கால ஒலிம்பிக்போட்டிக்கான ஜோதியை சீன வீரர்கள் ஏந்தி வந்தனர்.
ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மானில் நடைபெற்ற ராணுவ டாங்கிகள் கண்காட்சியை அந்நாட்டு மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
பெருநாட்டின் லிமாவில் பறவைகள் சட்டவிரோதமாக கூண்டில் அடைத்து வைக்கப்படுகிறது.
தைவான் நாட்டின் கிழக்கு பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் சரிந்து விழுந்தன. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டரில் 6.4 ஆக பதிவு ஆனது.
துருக்கியில் அரசுக்கு எதிராக குர்திஷ் இன மக்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.
சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 12க்கும் மேற்பட்டோர் பலியாயினர்
பாகிஸ்தானின் நவ்ஷெ ரா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த வீட்டின் முன் சோகமாக நின்றிருக்கும் சிறுவன்.
ரஷ்யாவில் சில நாட்களாக மழை போல் கொட்டுகிறது பனி. மாஸ்கோவின் கோலாமென்ஸ்கோயே பூங்காவில் 55 செ.மீ., உயரத்திற்கு பனி படர்ந்திருக்கிறது. மாஸ்கோவின் சில பகுதிகளில் மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. புரோக்கன் மவுண்டைன் பகுதியில் பனி படர்ந்த பாதையில் மெல்ல ஊர்ந்து செல்லும் ரயில் .
 
Advertisement