Advertisement

குளோபல் ஷாட்: 06-பிப்-2018

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் கேசி என்ற இடத்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் பலியானார்கள். .
சுவிஸ் நாட்டின் செயின்ட் மோரிட்ஜில் நடந்த குதிரைப் பந்தயத்தை ஆர்வமுடன் கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் சிறுவர்கள் பனியில் சறுக்கி விளையாடுகின்றனர்.
தென்மேற்கு ஜப்பானின் கன்சாகி பகுதியில் இரண்டு பேர் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குளளானது.
குழந்தைகளுக்கு பிடித்தமான ராட்டின வண்டியை அதன் உரிமையாளர் ஓட்டி வருகிறார் இடம்: பாலி, இந்தோனேஷ்யா.
ஜெர்மனியின் மோர்பெல்டனில் உள்ள காட்டுப் பகுதியில் கொஞ்சி மகிழ்ந்த இரண்டு குருவிகள்
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் உள்ள அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறிய புகைக்கு பின்னால் பொன்னிறமாக தோன்றிய மாலை நேர சூரியன்.
ரியோ டி ஜெனிரோவில் நடந்த நாய்களுக்கான திருவிழாவில் அலங்கரிக்கப்பட்டு வந்த நாய்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த நாய்களுக்கான திருவிழாவில் தனது நாயுடன் செல்பி எடுத்துக் கொண்ட பெண்.
 
Advertisement