Advertisement

குளோபல் ஷாட்: 13-ஜன-2018

நியூயார்க் நகர் வழியாக பாயும் ஹுட்ஸன் ஆற்றின் நீர்ப்பரப்பில் படர்ந்துள்ள பனிக்கட்டிகள்.
பராகுவே நகருக்கு அருகே குளத்தில் தோன்றியுள்ள இரண்டு மீட்டர் விட்டம் கொண்ட அல்லி இலைகள் பார்ப்பதற்கு அழகாக உள்ளன.
சுவிஸ் நாட்டின் ஜெர்மாட் பகுதியில் பனி மூடிய சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் சீரமைக்கும் பணி துவங்கப்பட்டது
வாஷிங்டன் நகரில் உள்ள கேபிடல் பில்டிங்கின் அதிகாலை வேளையில் கிளிக் செய்யப்பட்ட அற்புத தோற்றம்.
மின்னெசோடா மாகாணத்தின் ரோசெஸ்டர் நகரில் ஏற்பட்ட கடும் பனிப் பொழிவின் போது தன் காரில் படிந்துள்ள பனிப்போர்வையை அகற்றும் வேலையில் ஈடுபட்ட பெண்.
சமீபத்திய கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய ஜெர்மனியின் ரைனே ஆற்றின் கரையோர பகுதி.
சீனாவின் கிழக்கு கடல் பகுதியில் தீப்பிடித்து எரிந்த எண்ணெய் கப்பல் மீது தண்ணீர் பாய்ச்சி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இரு கப்பல்கள்.
சீனாவின் கிழக்கு கடல் பகுதியில் தீப்பிடித்து எரிந்த எண்ணெய் கப்பலிலிருந்து வெளிப்பட்ட புகை மண்டலம். இவ்விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ கடற்கரை பகுதியில் வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக கடந்த 40 நாட்களில் 200க்கும் மேற்பட்ட டால்பீன்கள் இறந்து கரை ஒதுங்கின.
சுவிஸ் நாட்டின் வேன்கன் என்ற இடத்தில் உள்ள பனிசறுக்கு மையத்தில் பயிற்சியில் ஈடுபட்ட நார்வே வீரர் அத்ரியன் ஸ்மிஷத்.
 
Advertisement