Advertisement

குளோபல் ஷாட்: 07-டிச-2017

காலிபோர்னியாவின் சான் கப்ரீல் மலைப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயால் எழுந்துள்ள புகை மண்டலம் இடம்: லாஸ் ஏஞ்ஜெல்ஸ்
காலிபோர்னியா மாகாணத்தை உலுக்கி எடுக்கும் காட்டுத்தீ வென்சுரா நகரில் உள்ள குடியருப்பு பகுதியை எரித்து நாசமாக்கியது. அதை மாடியில் நின்று இருவர் பார்க்கின்றனர்.
அமெரிக்கா இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரித்தற்கு பாலஸ்தீனர்கள் காஜா நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெர்மனியின் எய்ப்ஸி ஏரி அருகே காணப்படும் பனி படர்ந்த காட்டுப் பகுதி.
மேற்கு ஜெர்மனியின் மீர்புஷ் அருகே நேற்று பயணிகள் ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயம் அடைந்தனர்.
கம்போடியாவின் நோம்பென் ஆற்றில் தனது மரப்படகின் மூலம் மீன் பிடிக்கும் மீனவர்கள்.
காலிபோர்னியா மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் அருகே பற்றி எரியும் காட்டுத்தீயின் காரணமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
 
Advertisement