Advertisement

குளோபல் ஷாட்: 05-டிச-2017

அர்ஜென்டைனாவின் ப்ளாடாவில் 44 பேருடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் தேடும் பணி நிறுத்தப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெர்மனியின் ஸீவர்ஸ்டோர்பில் வானில் மோட்டார் கிளைடரில் பயணித்த பெண். வலது பக்கம் காற்றாலையுடன் வானில் அழகாக தோன்றும் நிலவு.
ஜப்பானில் நிலவும் இலையுதிர்க் காலவேளையில் டோக்கியோ நகரில் உள்ள பூங்கா ஒன்றில் வண்ணமயமாக உள்ள மரங்களிடையே செல்பி எடுத்து மகிழும் பெண்.
இந்தோனேஷ்யாவின் பாலி தீவில் அகுங் எரிமலைக்கு அருகே உள்ள நிலத்தில் விவசாயத்தில் ஒருவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்தோனேஷ்யாவின் பாலி தீவில் உள்ள எரிமலை அகுங் உச்சியில் தொடர்ந்து கரும்புகை வெளியேறி வருவதால் அங்கு வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அந்நாட்டு அரசு வலியுறுத்தி வருகிறது.
ஜெர்மனியின் பிராங்புர்ட் புறநகர்ப் பகுதியில் பனி படர்ந்துள்ள மரத்தின் அடியில் நின்றுள்ள மான்கள்.
இங்கிலாந்தின் டைன்மவுத் கடற்கரையில் காலை நேரத்தில் தங்கள் நாயுடன் ஜாக்கிங்கில் ஈடுபட்ட இருவர்.
தென்கிழக்கு இங்கிலாந்தின் விட்பியில் நேற்று வானில் அழகாக தோன்றிய சூப்பர் மூன்.
 
Advertisement