Advertisement

குளோபல் ஷாட்: 03-டிச-2017

பங்களாதேஷ் தலைநகர் தாகாவில் நடந்த நடன நிகழ்ச்சி ஒன்றை பார்வையிட்ட போப் பிரான்ஸிஸ்.
அமெரிக்கா வடக்கு கரோலினா மாகாணத்தின் ரோலேண்ட் அருகே ரயில் பாதையின் குறுக்கே வானத்தில் கூட்டமாய் பறந்து சென்ற பறவைகள்.
வடக்கு ஸ்பெயினில் முதன் முதலாக நிகழ்ந்த பனிப்பொழிவில் அங்குள்ள கிராமம் ஆர்ஸேயில் வெண்நிற போர்வை போர்த்தியது போல பனிபடர்ந்து காணப்படும் காட்சி.
வடக்கு ஸ்பெயினின் எல் எஸ்பினால் அருகே பனிபடர்ந்த பகுதியில் திரியும் குதிரை.
இந்தோனேஷ்யாவின் பாலி தீவில் உள்ள அகுங் எரிமலை தொடர்ந்து குமுறி வருவதால் அப்பகுதியில் வசிக்கும் 10,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஹோன்ட்ராஸ் தேர்தலில் போட்டியிட்ட அதிபர் வேட்பாளர் சல்வாடர் நஸ்ரல்லாவின் ஆதரவாளர்கள் தேர்தலில் நடந்த ஊழலை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இடம்: டெகுசிகல்பா
கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதை முன்னிட்டு ஜெர்மனியின் நுரெம்பெர்க் நகரில் சந்தையில் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டிய மக்கள்.
கொலம்பியா நாட்டின் போகோடா நகரில் பெய்த பலத்த மழையின் போது குடை பிடித்து செல்லும் பெண்.
அல்பேனியாவில் பெய்த கனமழையால் அந்நாட்டின் ஹஸான் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்ததையடுத்து தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு பெண்ணும் அவரது மகனும்.
 
Advertisement