Advertisement

குளோபல் ஷாட்: 02-டிச-2017

அல்பேனியா நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கஸான் கிராமத்தில் மூழ்கும் நிலையில் உள்ள கார்.
வடக்கு அல்பேனியாவின் மாமுராஸ் கிராமம் அருகே பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இடிந்து விழுந்த பாலம்.
காலிபோர்னியா மாகாணம் அனாகெய்மில் நடந்த விழாவில் பாரம்பரிய உடையணிந்து நடனமாடிய பெண்கள்.
இந்தோனேஷ்யாவின் பாலி தீவில் உள்ள அகுங் எரிமலை 50 ஆண்டுகளுக்கு பிறகு குமுற தொடங்கி உள்ளதால் அதன் உச்சியிலிருந்து கிளம்பிய புகையை ஆர்வமுடன் பார்க்கும் மாணவர்கள்.
அமெரிக்காவின் மிக்சிகன் டவுன்டவுன் பிலின்டில் உள்ள மிருகங்கள் காப்பகத்தில் இடம் பெற்றுள்ள மான் ஒன்றுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்த பெண்.
இந்தோனேஷ்யாவின் பாலி தீவில் உள்ள அகுங் எரிமலை குமுறி வருவதால் புகை வெளியேறி வருகிறது. இந்நிலையில் அம்மலைக்கு அருகே உள்ள கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுள்ள மக்கள்.
தெற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்டுட்கார்ட் நகர் அருகே பனிபடர்ந்த காட்டுப் பகுதியில் சைக்கிளில் செல்லும் இளைஞர்.
ஜெர்மனியின் கோபெல்ட் அருகே பனி படர்ந்த பகுதியில் கூட்டமாக நின்ற செம்மறி ஆடுகள்.
அமெரிக்காவின் நியூயார்க் அருகே கோகோஸில் ஒரு கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீயினை அணைக்க போராடும் வீரர்கள்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரில் உள்ள ஏரிக்கரையில் இதமான இலையுதிர்க்கால சூழ்நிலயைில் தன் மகனை வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு தன் நாயுடன் செல்லும் பெண்.
 
Advertisement