Advertisement

குளோபல் ஷாட்: 01-டிச-2017

இந்தோனேஷ்யாவின் பாலி தீவில் உள்ள அகுங் எரிமலை குமுறத் தொடங்கி உள்ளது. தொலைவிலிருந்து தோன்றும் அம்மலையில் இயற்கை எழில் மிகுந்த காட்சி.
கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதால் ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் உள்ள ஒபேரா கட்டடத்தின் முன் இடம் பெற்றுள்ள நீரூற்று மின்னொளியில் ஜொலிக்கின்றன.
நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரங்களை ஆர்வமுடன் பார்வையிடும் பெண்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நியூயார்க் நகரில் உள்ள கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கிறிஸ்துமஸ் மரங்கள்.
மியான்மரிலிருந்து பங்களாதேஷ் நோக்கி இடம் பெயர்ந்த ரோஹிங்யா முஸ்லீம்கள் இடையில் நாப் ஆற்றினை பிளாஸ்டிக் படகு மூலம் கடந்து சென்ற காட்சி.
இந்தோனேஷ்யாவின் பாலி நகரில் உள்ள அகுங் எரிமலையிலிருந்து வெளிப்பட்ட கரும்புகை மண்டலம் சூரியனின் கதிர் பட்டு செந்நிறமாக மின்னுகிறது.
வாஷிங்டன் கேபிடல் கட்டடம் பின்புறம் மாலை நேரத்தில் செந்நிற மேகங்கள் வானில் தோன்றின.
 
Advertisement