Advertisement

குளோபல் ஷாட்: 30-நவ-2017

இந்தோனேஷ்யாவின் பாலி தீவில் உள்ள அகுங் எரிமலையிலிருந்து புகை வெளியேறி வருவதால் அப்பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் வீடுகளில் சாம்பல் படிந்து காணப்படுகிறது.
மியான்மிரின் யோங்கோ நகரில் நடந்த புத்தமதத்துறவிகள் மற்றும் கிறிஸ்துவ போதகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் போப் பிரான்ஸிஸ் கலந்து கொண்டார்.
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் டாக்ஸி டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த சர்வதேச ரோபோ கண்காட்சியில் இடம் பெற்ற நாய்க்குட்டி வடிவிலான சிறிய ரோபபோக்கள். இவை வாடைகளுக்கு ஏற்ப செயல்படும் திறன் படைத்தவை.
இந்தோனேஷ்யாவின் எரிமலை அகுங் அருகே உள்ள பகுதியில் ஒரு பெண் மற்றும் குழந்தை விளயாடி கொண்டிருக்கின்றனர்.
இந்தோனேஷ்யாவின் பாலி தீவில் உள்ள அகுங் எரிமலையிலிருந்து புகை வெளியேறுவதை சுற்றுலா பயணிகள் படம் பிடிக்கின்றனர்.
கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதையொட்டி ஜெர்மனியின் எர்புர்ட் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தை மின்னொளியில் ஜொலிக்கிறது.
 
Advertisement