Advertisement

குளோபல் ஷாட்: 12-அக்-2017

சுவிஸ் நாட்டின் விமான ராணுவப் படை விமான சாகச நிகழ்ச்சிகளை ஆல்ப்ஸ் மலை உச்சியில் கடல் மட்டத்திலிருந்து 2200 மீட்டர் உயரத்தில் நின்று ரசிக்கும் மக்கள்.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் இலையுதிர்காலத்தை முன்னிட்டு வண்ணமயமாக உள்ள மரங்களை ரசித்தபடி செல்லும் மக்கள்.
இந்தோனேஷ்யாவின் பாலித் தீவில் உள்ள அகுங் எரிமலை நேற்று குமுறியதில் புகை வெளியேறியது. அதை மிரட்சியுடன் பார்க்கும் குபு கிராமத்தைச் சேர்ந்த மக்கள்.
காலிபோர்னியா மாகாணத்தின் ஹாப் மூன் பேயில் நடந்த 44வது உலக பூசணி சேம்பியன்ஷிப்பில் 2363 பவுன்ட் எடை கொண்ட பூசணி முதல் பரிசை தட்டிச் சென்றது.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் நடந்த புத்தக கண்காட்சியில் அலங்கார வண்ண பலூன்களை சரி செய்யும் பெண்.
தெற்கு ஜெர்மனியின் கான்ஸ்டன்ஸ் ஏரி அருகே உள்ள ஆப்பிள் தோட்டத்தில் அறுவைடை செய்யப்படும் ஆப்பிள் பழங்கள்.
வடக்கு கரோலினாவின் கோராபிகேயில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் காணப்பட்ட ஒரு பட்டுப்போன மரம் ஒரு விநோத மிருகம் போல் இருந்தது.
காலிபோர்னியா மாகாணத்தின் சான்டா ரோசா பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயின் புகை மண்டலத்தில் பின்னே மங்கலாய் தெரியும் சூரியன்.
அமெரிக்காவின் அல்புகுவ்குவில் நடந்த பலூன் திருவிழாவில் கலந்து கொண்ட வண்ணமயமான பலூன்.
ஆஸ்திரேலியாவின் டார்வின் அடிலேடு இடையேயான 3000 கி.மீ., தூரத்திற்கான ரேசில் 21 நாடுகளிலிருந்து 42 சோலார் கார்கள் கலந்து கொண்டன.
 
Advertisement