Advertisement

குளோபல் ஷாட்: 13-செப்-2017

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தலிம் என்ற புயலால் கனமழை கொட்டி தீர்த்தது. வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள்.
ஹட்டர்ஸ்பீல்டு டவுன் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் வெஸ்ட் ஹாம் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அபோயல் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் சாதிக்க பயிற்சியில் ஈடுபட்ட ரியல் மாட்ரிட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இடம்: மாட்ரிட், ஸ்பெயின்
லாகூரில், பாகிஸ்தானுக்கு எதிரான 'டுவென்டி-20' போட்டிக்கு முன்அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ- ரிக் ஷாவில் மைதானத்தை வலம் வந்த கேப்டன் டுபிளசி உள்ளிட்ட உலக லெவன் அணி வீரர்கள்.
ஜெர்மனியின் பிராங்க்பர்ட்நகரில்நடந்த சர்வதேச ஆட்டோ ஷோவில் வோல்ஸ்வோகன் நிறுவனத்தின் நவீன் சொகுசு கார் பார்வையாளர்களை கவர்ந்தது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் தொலைதொடர்புக்காக ரஷ்யா அமேசான்-5 என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. இடம்: பைகனூர், கஜகஸ்தான்.
கியூபாவை சூறையாடிய இர்மா புயலில் இஸ்பெல்லா டி ஷகுவா தீவு சின்னாபின்னமானது. அங்கு வசித்தவர் ஒருவரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பொம்மை
ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளான கவுதமாலா நாட்டின் அதிபர் ஜிம்மி மார்லஸ் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்ற அந்நாட்டு பார்லிமென்ட் கூட்டம் கூடியது.இடம்: கவுதமாலா சிட்டி.
வடகொரியா மீது பொருளாதார தடை விதிப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் அதன் தலைமையகத்தில் நடந்தது. இதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இடம்: நியூயார்க்.
ஸ்பெயினில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் டோரோ டி லேகா எனப்படும் காளை விளையாட்டு திருவிழாவில் சீறி வரும் காளையுடன் சாகசம் செய்யும் இளைஞர். இடம்: டோர்டிசெல்லாஸ் நகரம்.
 
Advertisement