Advertisement

குளோபல் ஷாட்: 11-செப்-2017

மியான்மரில் முஸ்லீம்கள் தாக்கப்படுவதை கண்டித்து பாகிஸ்தான் கராச்சி நகரில் பேரணி ஒன்றை நடத்தினர்.
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள 6 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள 6 மாடி கட்டடத்தில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
மியான்மரில் முஸ்லீம்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரான் டெஹ்ரான் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மியாமி நகரை இர்மா புயல் தாக்கிய போது வெள்ளம் சூழ்ந்த ஒரு ரோட்டில் நின்று நிகழ்வுகளை படம் பிடிக்கும் ஒரு டி.வி., நிறுவன ஊழியர்கள்.
இர்மா புயல் லாடர்டேல் நகரை தாக்கிய போது காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஆட்டம் போட்ட மரங்கள்.
புளோரிடா மாகாணத்தின் மியாமி நகரில் தாண்டவம் ஆடிய இர்மா புயலால் எழுந்த அலைகள்.
கியூபாவின் ஹவானா நகரை இர்மா புயல் தாக்கிய போது பொங்கி எழுந்த ராட்சத கடல் அலை.
 
Advertisement