Advertisement

குளோபல் ஷாட்: 10-செப்-2017

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத நிலையில் இருந்த 1.8 டன் எடையுள்ள பயங்கர வெடிகுண்டை ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரைச் சேர்ந்த நிபுணர்கள் செயல்இழக்க செய்தனர்.
ஜெர்மனியின் மெயினின்கெனில் ரயில் தயாரிப்பு தொழிற்சாலையில் நீராவி என்ஜின் நாள் கொண்டாடப்பட்டது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் கொலம்பியா நதியை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயின் காரணமாக அப்பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையி்ல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் விற்பனைக்கு எடுத்துச் செல்வதற்காக பேக் செய்யப்பட்ட காய்கறிகள்.
துருக்கி நாட்டின் கடற்பகுதியில் தத்தளித்த சிரிய அகதிகள் அந்நாட்டு கடற்படையால் காப்பாற்றப்பட்டனர்.
அமெரிக்கா நியூயார்க் நகரில் இரட்டை கோபுர வர்த்தக மையம் தகர்க்கப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைய இருப்பதால் அப்பகுதியில் ஒளிமயமாக ஜொலித்த கட்டடங்கள்.
மெக்ஸிகோவின் ஜூகிட்டான் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் இடிந்து விழுந்து சேதமான குடியிருப்பு.
கென்ய தலைநகர் நைரோபியில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் அந்நாட்டு அதிபர் உகுரு கென்யடாவின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இர்மா புயலால் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்கோன்வில்லே கடற்கரையில் கடல் கொந்தளித்து காணப்பட்டது.
இர்மா புயல் காரணமாக மியாமி கடற்கரையில் எழுந்த அலைகள்.
இர்மா புயல் காரணமாக மியாமியில் பலத்த காற்று வீசிய போது இருவர் பாதுகாப்பான இடத்தில் ஒதுங்கினர்.
இர்மா புயல் கியூபாவை தாக்கிய போது கல்பேரியன் கடற்கரையில் காற்றின் வேகத்தில் ஆடிய பாம் மரங்கள்.
மியாமியில் உள்ள மிருகக்காட்சி சாலையில் இடம் பெற்றுள்ள பிளமிங்கோ பறவைகள்.
 
Advertisement