Advertisement

குளோபல் ஷாட்: 09-செப்-2017

பிரான்ஸ் நாட்டின் மார்ட்டின் தீவில் லிர்மா புயல் தாக்கியதில் 15 பேர் பலியானார்கள். புயலால் பாதிப்பு அடைந்த கார்கள்
மெக்ஸிகோவில் தெற்கு கடற்கரைப் பகுதியில் உலுக்கிய நிலநடுக்கத்தால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
சிரியாவின் அலிப்போ நகரில் உள்ள மிருககாட்சி சாலையில் தனது குட்டியுடன் காணப்படும் தாய்சிங்கம்.
மெக்ஸிகோவின் டெகோலுசியா ஆற்றின் ஓரமாக புயல் நேரத்தில் தனது சைக்கிளில் ஒருவர் செல்கிறார்.
மெக்ஸிகோவில் ஜூகிடான் பகுதியில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டதால் இடிந்து தரைமட்டமான வீடுகள்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இர்மா புயல் தாக்கும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கையாக பிளாகியர் பீச்சில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வடக்கு ஜெர்மனியின் ரோஸ்டாக் மிருககாட்சி சாலையில் பிறந்து ஏழு வாரம் ஆன தனது குட்டியை பாசத்துடன் அரவணைத்து கொண்டுள்ள ஓரன்குட்டான் குரங்கு.
தெற்கு ஜெர்மனியின் ப்யூசென் நகரில் மாலை நேரத்தில் வானில் கருமேகங்கள் திரண்டிருக்க ஏரி அருகே ஒருவர் வாக்கிங்கில் ஈடுபட்டுள்ளார்.
இர்மா புயல் கியூபா அருகே கரை கடந்த போது கடற்கரையில் இடம் பெற்றுள்ள பாம் மரங்கள் அசைந்தாடிய காட்சி.
கனடா நாட்டின் பீச்லேண்ட் பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
Advertisement