Advertisement

குளோபல் ஷாட்: 07-செப்-2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய உத்தரவை கண்டித்து வாஷிங்டன்னில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவை இர்மா புயல் தாக்க வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கையாக மணல் மூட்டைகளை தயார் செய்யும் அமெரிக்கர்கள்.
நியூயார்க் அருகே உள்ள வயலில் பெண்கள் உரிமை போராட்ட காரர் சுஸான் பி அந்தோனியின் உருவப்படம் பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மவுன்டன் வியூ அருகே கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்கள் வரிசையாக நின்றுள்ளன.
புதிய இர்மா புயல் கரீபியன் கடல்கரையை தாக்க இருப்பதால் கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை ரசிக்கும் மக்கள். இடம்: யுர்டோ ரிகோ
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் கியூபா அருகே புதிய இர்மா புயல் உருவாகி உள்ளதால் கரிபியன் கடலில் ஆர்ப்பரித்து எழும் அலைகள்.
மியான்மரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து பேரணி ஒன்றை நடத்தினர் இடம்: கராச்சி பாகிஸ்தான்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை அச்சுறுத்தும் புதிய இமா புயல்.
ஜெர்மனியின் மாக்டிபுர்க்கில் உள்ள உயிரியல் பூங்காவில் தன் குட்டியுடன் அமர்ந்திருக்கும் மான்ட்ரில் குரங்கு.
மத்திய தரைக்கடலில் ரப்பர் படகில் தத்தளித்த அகதிகளுக்கு ஸ்பெயின் நாட்டு தன்னார்வ அமைப்பு ஒன்று லைப் ஜாக்கெட்டுகள் வழங்கி உதவியது.
 
Advertisement