Advertisement

குளோபல் ஷாட்: 10-ஆக-2017

கென்யா அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய அதிபர் உகுரு கென்யாட்டா முன்னணியில் இருந்தார். ஆனால் தேர்தலில்முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி எதிர்க்கட்சி வேட்பாளர் ஓடிங்கா ஆதாரவளார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீனாவின் தென்மேற்கில் உள்ள சிசுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் பலியாகினர். ஜியுஜாய்கோவில் ரோடு பலத்த சேதம் அடைந்தது.
பிரி்ட்டனில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் 200 மீ ஓட்டத்தின் தகுதிச்சுற்றில் அசத்திய நெதர்லாந்தின் டாப்னே, அரையிறுதிக்கு முன்னேறினார்.இடம்:லண்டனம்.
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் முதல் சுற்றில் கனடாவின் பவுச்சர்டு குரோஷியாவின் டோன்னாவிடம் வீழ்ந்தார். இவருக்கு வாழ்த்து தெரிவித்த பவுச்சர்டு. இடம்: டொரன்டோ.
சீனாவின் தென்கிழக்கு மாகாணமான யுனானான் நகரில் நடந்த பாரம்பரிய கிராமிய திருவிழாவில் கலாச்சார உடையணிந்து நடனமாடிய கிராமவாசிகள்.
சிங்கப்பூரின் 52-வது சுதந்திர தினத்தையொட்டி மெரினா வளைகுடா பகுதியில் கண்ணை கவரும் வாண வேடிக்கை நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
பின்லாந்தின் ஹெ ல்சின்க் நகரில் வானில் திடீரென வட்டவடிவில் விரிசல் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த நிகழ்வு மறைந்தது.
1989-ல் பிரிட்டனின் ஹில்ஸ்பர்க் கால்பந்து மைதான விபத்து தொடர்பான வழக்கில் வாரிங்டன் மானிஸ்திரேட் கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் பீட்டர் மெட்காப் ஆஜராக வந்தார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய போலீஸ் தினத்தின் 116-வது ஆண்டையொட்டி நடந்த சாகச நிகழ்ச்சியில் போலீசாரின் வித்தியாச வேடம் பார்வையாளர்களை கவர்ந்தது. இடம்: மணிலா.
கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கும் சூரிய காந்தி மலர்கள். இடம்: ஜெர்மனியின் முனிச் நகர்.
 
Advertisement