Advertisement

குளோபல் ஷாட்: 05-ஆக-2017

வாஷிங்டன் அருகே மழை பெய்த வேளையில் வானில் தோன்றிய வானவில் அழகாக இருந்தது.
ரஷ்யாவின் உக்லிஸ் நகரில் கடையோரத்தில் ஒரு பூனை கொட்டாவி விடுகிறது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா துறைமுகம் வந்த ஒரு உயரமான மெக்ஸிகோ பாய்மர கப்பல்.
இத்தாலி தலைநகர் ரோமின் புறநகர்ப் பகுதியில் லாமூர் வகை குரங்கு திண்பண்டம் ஒன்றை ருசித்து பார்க்கிறது.
இந்தோனேஷ்யாவின் பாலியில் நடந்த பட்டம் விடும் திருவிழாவில் வண்ணமயமான பட்டங்கள் விடப்பட்டன.
கிழக்கு ஜெர்மனியின் சீவர்ஸ்டோர்பில் உள்ள தோட்டத்தில் பூத்துள்ள சூரியகாந்தி மலர்கள் மற்றும் வானில் திரண்ட மேகங்களின் பின்னணியில் அழகாக தோன்றுகின்றன.
டெக்ஸாஸ் மாகாணம் ரேவுட் பகுதியில் உள்ள நெல் வயலில் அறுவடை நடைபெறுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து கனடா நாட்டின் க்யூபெக் நகருக்கு அகதிகளாக வெளியேறும் மக்கள்.
தெற்கு காலிபோர்னியாவில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரு கார் மூழ்கிய நிலையில் உள்ளது.
அமெரிக்காவின் போனிக்ஸ் நகரில் வீசிய கடும் புயலின் காரணமாக விழுந்த மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
Advertisement