Advertisement

குளோபல் ஷாட்: 17-மே-2017

ஜார்ஜியாவில் உள்ள டன்வூடியில் குடியரசு வேட்பாளருக்கு ஆதரவாக திரட்டும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் அமெரிக்க சபாநாயகர் பால் ரியானுக்கு பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள்.
ஜப்பான் மன்னரின் பேத்தி மேகோவுக்கு திருமண செய்தியை டி.வி. செய்தி அறிக்கையை கண்டு களித்த பார்வையாளர்கள்.
கிரீஸ் தலைநகர் ஏதேன்ஸ் அருகே அழகாக காட்சி தரும் பிரேயஸ் துறைமுகம்.
பிரிட்டனில் பொதுத்தேர்தல் வருவதை முன்னிட்டு, லிபரல் டெமாக்கரட்ஸ் கட்சி தலைவர் டிம் பெர்ரான், தென்மேற்கு இங்கிலாந்து பகுதிகளுக்கு பிரசாரத்திற்கு பஸ்சில் செல்லும் வழியில் தனது அலுவல்களை மேற்கொண்டிருக்கிறார்.
கலிபோர்னியா மாகாணத்தின் லா வெர்னேயில், லாஸ்ஏஞ்சல்ஸ் பகுதியிலிருந்து வந்த வாகனம் கரடி மீது மோதியது.காயமடைந்த கரடியை சிகிச்சைக்காக மீட்பு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
 
Advertisement