Advertisement

குளோபல் ஷாட்: 10-மே-2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஸ்பெயினில் நடந்தது. ரஷ்யாவில் மரியா ஷரபோவா, கனடாவின் இகியூன்பட்சர் மோதினர். இதில் பட்சர் வென்றார். இடம்:மாட்ரிட்.
இங்கிலீஸ் பிரிமீயம் லீக் கால்பந்து போட்டிகள் லண்டனில் துவங்கின. செலீசியா மற்றும் மிடில்ஸ்பரோக் அணிகள் இடையே நடந்தபோட்டியில்பந்தை தட்டிச்செல்ல முயலும் வீரர்கள்.
தென்கொரியா அதிபர் தேர்தல் நடந்தது. தலைநகர் சீயோலில் உள்ள ஓட்டுச்சாவடியில் பொதுமக்கள் ஒட்டளித்த காட்சி.
இந்தோனேஷியாவின் ஜகார்தா கவர்னர் பாசுகி அஹோக் மீது மதம் சம்பந்தமான வழக்குபதியப்பட்டு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது இதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
சீனாவில் உலகில் அதிவேக புல்லட் ரயில்கள் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து ரயிலை சுத்தப்படுத்தப்படும் பணியில் ஈடுபட்ட ஊழியர். இடம்: சாங்காங்க்.
புத்தரின் வேசாக் தினத்தையொட்டி சிங்கப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற தேவலாயத்தில் புத்ததுறவிகள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
இரண்டம் உலகப்போர் வெற்றி தினத்தையெட்டி ரஷ்யாவில் நடந்த ராணுவ அணிவகுப்பில் வீரர்களின் மிடுக்கான நடை பார்வையாளர்களை கவர்ந்தது: இடம்: மாஸ்கோ.
 
Advertisement