Advertisement

உலகம்: 09-நவ-2018

ஸ்ரீலங்காவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட ரனில் விக்கிரமசிங்கே தனது ஆதரவாளர்களுடன், தலைநகர் கொழும்புவில் பார்லிமென்ட் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
உலக வர்த்தக நிறுவனத்தின் பொது இயக்குநர் ராபர்டோ அஜெவேடோ (இடது) ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபேயை டோக்கியோவில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
இஸ்லாம் தேசிய தலைவரும் அமைச்சருமான லூயிஸ் பராக்கான் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ஜெர்மனியின் சீமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜோ கேஸர் அந்நாட்டின் முனிச் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வடக்கு பிரான்ஸின் மாபியுகேயில் உள்ள ரினால்ட் தொழிற்சாலைக்கு வருகை தந்தார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் (இடது), வடக்கு பிரான்ஸின் மாபியுகேயில் உள்ள ரினால்ட் தொழிற்சாலைக்கு சென்று அந்நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஸனை (வலது) சந்தித்தார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிருபர் ரோனா சிமித், கம்போடியாவின் நோம்பென் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பிரிட்டன் இளவரசர் ஹாரி லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
 
Advertisement