Advertisement

உலகம்: 10-ஜூலை-2018

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவியுடன் நியூஜெர்ஸி மாகாணம் பெட்மினிஸ்டர் சென்றிருந்தார். இருவரும் நேற்று வாஷிங்டன் திரும்பினர்.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் போம்பியோ (இடது) மற்றும் வியட்நாம் துணைமுதல்வரும் வெளியுறவு அமைச்சருமான பாம் பின் மின் (வலது) இருவரும் வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் சந்தித்தனர்.
தாய்லாந்தின் சியாங்ராய் மாகாணத்தின் கவர்னர் நரோங்சாங் ஒசாட்நாகோரன், குகைக்குள் மாட்டியிருக்கும் சிறுவர்களை மீட்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் வந்த கடலான் மண்டல தலைவர் குயிம் டோரோவை அந்நாட்டு பிரதமர் பெத்ரோ சான்கெஜ் கைகுலுக்கி வரவேற்றார்.
கதோலிக மதகுருக்களின் தலைவர் ரோமுலோ வாலெஸ் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் (வலது) மற்றும் சீன பிரதமர் லி கிகியாங் (இடது) இருவரும் பெர்லின் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் (வலது) மற்றும் சீன பிரதமர் லி கிகியாங் (இடது) இருவரும் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
குவைத் அதிபர் சேக் சபா அல் அகமது அல் சபா (இடது) மற்றும் சீன அதிபர் ஜி சின்பிங் (வலது) இருவரும் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸில்ஸில் நடந்த ஐரோப்பிய யூனியன்-உக்ரைன் உச்சிமாநாட்டில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் (வலது) மற்றும் உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோசென்கோ (இடது) கலந்து கொள்ள வந்தனர்.
 
Advertisement