Advertisement

உலகம்: 09-ஜூலை-2018

கிறிஸ்துவ மத தலைவர் போப் பிரான்ஸிஸ் வாடிகன் நகரின் சென்ட் பீட்டர் சதுக்கத்தில் நடந்த நண்பகல் பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.
துருக்கி அங்காரா நகரில் நடந்த பார்லிமென்ட் கூட்டத்திற்கு வந்த அந்நாட்டு அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
துருக்கியின் அங்காரா நகரில் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் பினாலி இல்திரிம் (மத்தி) கலந்து கொண்டார்.
துருக்கியின் முன்னாள் பிரதமர் பினாலி இல்திரிம் அங்காரா நகரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, வியட்நாமின் ஹனோய் நகரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ (இடது) மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டாரோ கானோ (வலது) இருவரும் டோக்கியோ, இம்பீரியல் விடுதியில் சந்தித்தனர்.
பாகிஸ்தான் ஆவாமி தேசிய கட்சி தலைவர் அஸ்வான்டியார் வாலி கான், சர்ஸாடா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.
லிபிய வெளியுறவு அமைச்சர் முகமது சியாலா (வலது) மற்றும் இத்தாலிய வெளியுறவு அமைச்சர் இன்சோ மோவெரோ (இடது) இருவரும் லிபியாவின் திரிபோலி நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
தென்கொரிய வெளியுறவு அமைச்சர் காங் குயுங் வா, ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபேயை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சந்தித்தார்.
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமி்ன் நேதன்யாகு (மத்தி) தலைநகர் ஜெருசேலத்தில் நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
 
Advertisement