Advertisement

உலகம்: 06-ஜூலை-2018

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரேட்பால்ஸ் நகரில் ஜூலை 5ம் தேதி நடந்த பேரணியில் கலந்து கொண்டார்.
நைஜீரியா வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அந்நாட்டின் லாகோஸ் நகரில் நடந்த தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசினார்.
கிரேக்க நாட்டின் புதிய குடியரசு கட்சித் தலைவர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் தலைநகர் ஏதென்ஸில் நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசினார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் (வலது) மற்றும் ஹங்கேரி பிரதம் விக்டர் ஓர்பென் (இடது) இருவரும் பெர்லின் அமைச்சகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசினர்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் (வலது) மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரஸா மே (இடது) இருவரும் பெர்லின் அமைச்சகத்தில் சந்தித்து பேசினர்.
தெற்கு பிரான்ஸின் கானேஸ் நகரில் நடந்த திரைப்படவிழாவில் அந்நாட்டின் பிரபல திரைப்பட இயக்குநர் கிளாடே லன்ஜ்மன் பேசினார்.
சீன வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் ஜியோ பெங், சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பிரிட்டன் சுகாதார செயலாளர் ஜெரேமி குன்ட் லண்டனில் நடந்த 70வது வருடாந்திர தேசிய சுகாதார சேவை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
ஆஸ்தி்ரிய தலைநகர் வியன்னா வந்த ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டாரோ கோனோவை (இடது) அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் காரின் கினிஸல் (வலது) கை குலுக்கி வரவேற்றார்.
 
Advertisement