Advertisement

உலகம்: 03-ஜூலை-2018

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா டிரம்ப் இருவரும் நியூஜெர்சி மாகாணத்தின் மேரரிஸ்டவுனிலிருந்து வாஷிங்டன் கிளம்பி சென்றனர்.
மெக்சிகோவின் அதிபர் வேட்பாளர் ஆன்ட்ரஸ் மேனுவெல் மெக்சிகோ நகரின் ஹில்டன் ேஹாட்டலில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.
ஜப்பான் இளவரசி அயாகோ (வலது) மற்றும் அவரது வருங்கால கணவர் கெய் மோரியா (இடது) இருவரும் டோக்கியோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபே (வலது) அந்நாட்டைச் சேர்ந்த ஸ்கேட்டிங் நடனகலைஞர் யுஜுரு கன்யுவுக்கு டோக்கியோவில் நடந்த நிகழ்ச்சியில் விருது வழங்கி கவுரவித்தார்.
இத்தாலியின் உள்த்துறை அமைச்சரும் வலது சாரி லீக் கட்சித் தலைவருமான மேட்டியோ சால்வினி மிலன் நகரில் உள்ள உணவுவிடுதிக்கு மதிய உணவு அருந்துவதற்கு வந்தார்.
ஜெர்மனியின் பேவேரியன் மாகாண கவர்னர் ேஹார்ஸ்ட் சீகோவர் பெர்லினில் நடந்த கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல், பெர்லினில் நடந்த குடியரசு கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கம்போடிய ராணுவப் படைகளின் தலைமை அதிகாரி சோ சோக்கா (இடது) மற்றும் கம்போடிய மக்கள் கட்சியின் வேட்பாளர் பால் சாரோஉன் இருவரும் நோம்பென் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
 
Advertisement