Advertisement

உலகம்: 02-ஜூலை-2018

மெக்சிகோ அதிபர் வேட்பாளர் ஆன்ட்ரெஸ் மேனுவெல் மெக்சிகோ நகரில் நடந்த தேர்தலின் போது ஓட்டுப்பதிவு மையத்திற்கு வருகை தந்தார்.
ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபே தலைநகர் டோக்கியோவில் நடந்த மண்டல பொருளாதார பங்குதாரர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
வடக்கு இத்தாலியின் போன்டிடா நகரில் நடந்த பேரணியில் பாரம்பரிய லீக் கட்சியின் தலைவர் மேட்டியோ சால்வினி பேசினார்.
ஹாங்காங் நகரில் நடந்த 21வது வருடாந்திர விழாவில் முன்னாள் அரசு தலைமை அதிகாரி டுங் சி க்வா (வலது) முன்னாள் தலைமை அதிகாரி லியுங் சுன் இங் (மத்தி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஹாங்காங் நகரின் 21வது வருடாந்திர விழாவில் அந்நகரின் அரசு தலைமை அதிகாரி கேரி லாம் கலந்து கொண்டார். (சிவப்பு உடை)
ஹாங்காங் அரசு தலைமை அதிகாரி கேரி லாம் (வலது) முன்னாள் தலைமை அதிகாரி டுங் சி க்வா (மத்தி) மற்றும் பலர் ஹாங்காங் நகரின் 21வது வருடாந்திர விழாவில் கலந்து கொண்டனர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் (இடது) மற்றும் முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சார்கோஜி (வலது) இருவரும் தலைநகர் பாரிஸில் நடந்த நிகழ்ச்சியில் சந்தித்து கொண்டனர்.
 
Advertisement