Advertisement

உலகம்: 08-மார்ச்-2018

கிழக்கு டிமோர் துணை பிரதமர் ஏஜியே பெர்யெய்ரா (இடது) மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷாப் (வலது) இருவரும் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் நடந்த முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் கிழக்கு வளாகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அதில் ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோவனும் கலந்து கொண்டார்.
உலக வங்கி தலைமை அதிகாரி கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா நேற்று ஐ.நா., தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார் இடம்: ஜெனிவா
சிரியாவுக்கான ஐக்கிய நாடுகள் சிறப்பு தூதுவர் ஜேன் எக்லேண்ட் ஐக்கியநாடுகள் தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார் இடம்: ஜெனிவா, சுவிஸ்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர்புதின் அந்நாட்டின் சமாரா நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
பெர்லினில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சிக்மர் கப்ரீல் (இடது), பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் (மத்தி) மற்றும் பெடரல் அமைச்சர் பீட்டர் ஆல்ட்மேயர் (வலது).
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் பீட்டர் ஆல்ட்மேயர் கலந்து கொண்டார்.
பிரிட்டன் இளவரசி காட்டே, லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளி ஒன்றில் மாணவர்களைச் சந்தித்து உரையாடினார்.
பிரிட்டன் இளவரசர் ஹாரி, சில்வர்ஸ்டோனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் புதிதாக வடிவமைத்த வாகனம் ஒன்றை பார்வையிட்டார்.
 
Advertisement