Advertisement

உலகம்: 07-டிச-2017

வாடிகன் நகரில் நடந்த வாராந்திர பார்வையாளர்கள் நேரத்தின் போது போப் பிரன்ஸிஸ்ைஸ சந்தித்த ஒரு பெண் அவரை அன்போடு கட்டித் தழுவினார்.
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர்கள் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வாஷிங்டன் ஓவல் அலுவலகத்தில் தங்கள் குடும்பத்தினருடன் சந்தித்தனர்.
கானடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ் (இடது) மற்றும் சீன பிரதமர் வாங் யாங் (வலது) இருவரும் சீனாவின் குவாங்சு நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கஜுவோ இஷிகுரோ நேற்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ேஹாமில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
துருக்கி பிரதமர் பினாலி இல்திரிம் (இடது) மற்றும் தென் கொரிய பிரதமர் லீ நாக் யோன் (வலது) நேற்று தென்கொரியாவி்ன் சியோல் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கென்னடி ஜுகானோவ் நேற்று மாஸ்கோ பார்லிமென்டின் கீழ்ச்சபையில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
ஈரானிய தலைவர் அயோத்அல்லா அலி காமினி தலைநகர் டெஹ்ரானில் நடந்த சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டார்.
கானடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ் (வலது ஓரம்) மற்றும் சீனாவுக்கான கனடா தூதுவர் ஜான் மெக்லாம் (இடது மத்தி) இருவரும் சீனாவின் குவாங்சு நகரில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
பிரிட்டன் பிரதமர் தெரஸா மே நேற்று லண்டன் பார்லிமென்ட்டில் வாராந்திர கேள்வி நேரத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றார்.
பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் (வலது) மற்றும் இத்தாலிய வெளியுறவு அமைச்சர் ஆங்கிளினோ அல்பானோ இருவரும் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸில்ஸில் நடந்த கூட்டத்தில் சந்தித்து பேசினர்.
 
Advertisement