Advertisement

உலகம்: 03-டிச-2017

வாஷிங்டன் வெள்ளை மாளிகை வந்த லிபிய பிரதமர் பயேஸ் அல் சராஜை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உற்சாகமாக வரவேற்றார்.
அமெரிக்க திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஓலிவர் ஸ்டோன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோ கிரேம்ளினில் சந்தித்து பேசினார்.
போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் வந்த கிரேக்க பிரதமர் அலெக்ஸிஸ் சிப்ராைஸ அந்நாட்டு பிரதமர் அன்டோனியோ கோஸ்டா கைகுலுக்கி வரவேற்றார்.
ஜெர்மனியின் மாற்றுக் கட்சி தலைவர் ஜோயர்க் மியூதென் ஜெர்மனியின் ஹானோவர் நகரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்த ஈராக் சுவாதீன குர்தீஸ் பகுதி பிரதமர் நெசிர்வான் பஜ்ரானியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன் வரவேற்றார்.
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சாங் தாவ் (இடது) மற்றும் ஜப்பானின் புதிய கொமெய்டோ கட்சி தலைவர் நாட்சவ் யாமாகுசி (வலது) இருவரும் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த கூட்டத்தில் கைகுலுக்கி கொண்டனர்.
மியான்மர் அரசு ஆலோசகர் அவுங் சான் சூ கி, சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த கூட்டத்தில் சீன அதிபர் ஜி சின்பிங்கை சந்தித்தார்.
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சாங் தாவ் நேற்று தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
மியான்மர் அரசியல் தலைவர் அவுங் சான் சூ கி நேற்று சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
பங்களாதேஷ் தலைநகர் தாகா வந்த போப் பிரான்ஸிஸ் அங்கு கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மக்களை சந்தித்தார்.
 
Advertisement