Advertisement

உலகம்: 01-டிச-2017

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் நேற்று ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் சிக்மார் கப்ரீலை சந்தித்த பின் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் நேற்று பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கய்பாவை வாஷிங்டன் வெள்ளைமாளிகையின் ஓவல் அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
தென் கொரிய அதிபர் மூன் ஜே தலைநகர் சியோலில் நடந்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் கலந்து கொண்டார்.
ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மேத்வேவ் மாஸ்கோவில் நடந்த தொலைக்காட்சி பேட்டிக்கு பதில் அளித்தார்.
பிரிட்டன் பிரதமர் தெரஸா மே (வலது) நேற்று ஜார்டன் அரசர் அப்துல்லாவை (இடது) அம்மான் நகரில் சந்தித்தார்.
இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அங்கிலினோ அல்பானோ (வலது) மற்றும் கதார் வெளியுறவு அமைச்சர் ேஷக் முகமது பின் அப்துல்ரகுமான் அல் தானி இருவரும் இத்தாலி தலைநகர் ரோமில் நடந்த வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் பின்லாந்து நாட்டின் ெஹல்சிங்கியில் உள்ள ஆரம்பப்பள்ளி மாணவர்களை சந்தித்தார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று சீன தலைநகர் பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜி சின்பிங்கை சந்தித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ேஷாய்கு இருவரும் பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் நடந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர்.
பங்களாதேஷ் தலைநகர் தாகா சென்ற போப் பிரான்ஸிஸ் பங்களாதேஷ் அதிபர் அப்துல் ஹமீதை சந்தித்தார்.
 
Advertisement