Advertisement

உலகம்: 30-நவ-2017

பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் ஹய்வாவை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் இருவரும் பென்டகனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வாஷிங்டன் வெள்ளைமாளிகையின் ரோஸ்வெல்ட் அறையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ஐக்கிய நாடுகளின் சிரியாவுக்கான சிறப்பு தூதுவர் ஸ்டவ்வான் டி மிஸ்துரா ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலகம் ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (வலது) மற்றும் கிர்கிஸ்தான் அதிபர் சூரன்பய் ஜீன்பெகோவ் (இடது) நேற்று மாஸ்கோ கிரேம்ளினில் சந்தித்து பேசினர்.
மியான்மரின் யாங்கோன் நகரில் உள்ள செயின்ட் கதீட்ரலில் மதத்தலைவர்களை போப் பிரான்ஸிஸ் நேற்று சந்தித்தார்.
ஜப்பான் பேரரசர் அகிகிடோ மற்றும் ஜப்பான் பேரரசி மிசிகோ இருவரும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கிரேண்ட் டியூக் ெஹன்ரி வழங்கிய கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் நேற்று அபித்ஜானின் நடந்த ஐரோப்பிய யூனியன் ஆப்பிரிக்க மாநாட்டில் கலந்து கொண்டார்.
ஈராக் பிரதமர் ஐ தர் அல் அபாதி (வலது) மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரஸா மே (இடது) இருவரும் பாக்தாத் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
ஹங்கேரி அதிபர் ஜோனஸ் அடெர் (வலது) மற்றும் சீன பிரதமர் லீ கியாங் (இடது) இருவரும் நேற்று ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உள்ள அதிபர் மாளிகையின் மாடியில் பனிப் பொழிவின் இடையே நின்று பேசினர்.
எகிப்து அதிபர் அப்தெல் பட்டாஹ் எல் சிசி (இடமிருந்து இரண்டாவது) மற்றும் ேஷக் அகமது எல் தயீப் அல் அஜார் நேற்று கெய்ரோவில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
 
Advertisement