Advertisement

உலகம்: 14-செப்-2017

சேலேசியன் பாதர் தாமஸ் உஜுகுன்னாலில் வாடிகன் நகரில் உள்ள சாந்தா மார்டா இருப்பிடத்தில் போப் பிரான்ஸிைஸ சந்தித்தார்.
வாடிகன் நகரில் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடந்த பார்வையாளர்கள் சந்திப்பில் போப் பிரான்ஸிஸ் பார்வையாளர் ஒருவர்க்கு கன்றுக்குட்டி பரிசளித்தார்.
சுவிஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிடியர் புர்க்ஹால்டர் (வலது) மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் லே லுவாங் மின் (இடது) இருவரும் சுவிஸ் நாட்டின் பெர்ன் நகரில் சந்தித்தனர்.
முன்னாள் பிரான்ஸ் ஒலிம்பிக் வீரர் டோனி எஸ்டான்குஸ்ட் பெரு நாட்டின் லிமா நகரில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பிரான்ஸ் தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் டென்னிஸ் மாஸிக்லியா (வலது) மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஜெனரேசன் 2024 அமைப்பின் பிரதிநதி யூசெப் ஹலோவா (இடது) இருவரும் பெரு நாட்டின் லிமா நகரில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அமெரிக்க பார்லியின் சபாநாயகர் பால் ரியான் கேபிடல் ஹில்லில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
சீன அதிபர் ஜி சின்பிங் (வலது பின்புறம்) மற்றும் பொருனை சுல்தான் ஹசனால் போல்கியா (இடது பின்புறம்) இருவரும் சீனதலைநகர் பெய்ஜிங்கில் நடந்த முக்கிய ஒப்பந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
வாஷிங்டன் கவர்னர் ஜே இன்ஸ்லே சீட்டேல் நகரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
பிரிட்டன் பிரதமர் தெரசா மே லண்டன் பார்லியில் கேள்வி நேரத்தில் கலந்து கொள்வதற்காக தனது இருப்பிடத்திலிருந்து கிளம்பி சென்றார்.
 
Advertisement