Advertisement

உலகம்: 13-செப்-2017

செக் குடியரசு நாட்டிற்கு சென்றிருந்த ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் பிராங்க் வால்டைர் ஸ்டைம்மர், அந்நாட்டு வெளியுறவு அமசை்சர் மைலோஸ் ஜிமெனை சந்தித்தார். இடம்: பரேகு.
வடகொரியா ஏவுகணை விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு தூதர் நிக்கி ஹாலே, சுவீடன் தூதரை சந்தித்தார். இடம்: நியூயார்க்.
அர்ஜென்டினா சென்றிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகூவிற்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இடம்: பியூனேஸ் ஏர்ஸ்.
நார்வேயில் ஆளும் தொழிலாளர் கட்சி தலைவர் தேர்தல் நடந்தது. இதில் கட்சியின் தற்போதைய தலைவர் ஜோனஸ் கோஹர் ஆதாரவாளர்கள் மத்தியில் பேசினார்.இடம்: ஓஸ்லோ.
ஈரான் தலைநகர் டெஹரானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்நாட்டு தலைமை மதகுரு அயோத்துல்லா அல் கோமெய்னி கலந்து கொண்டு பேசினார்.
போலாந்து சென்ற முன்னாள் ஜியார்ஜியா அதிபர் மிகைல் ஷகாஸ்வெலி அங்கிருந்து கட்டயமாக உக்ரைன் எல்லைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். உக்ரைனில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். இடம்;கிவிவ்.
கம்போடியாவில் ஆளும் கம்போடிய தேசிய கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தலைவர் சன் ஷகே பேசினார். இடம்:நம்பென்.
அமெரிக்கா வந்திருந்த மெக்சிகோ வெளியுறவு அமைச்சர் லூயிஸ் வெட்கிரே, கலிபோர்னியா மாகாண சபாநாயகர் ஆன்டணி ரென்டானை சந்தித்தார். இடம்: ஸ்கராமென்டோ.
சீனா வந்திருந்த ஜி-20 அமைப்பின் நிதித்துறைவாரிய தலைவர் மார்க் கார்னே, சீன பிரதமர் லீ கெஹியாங்கை சந்தித்தார். இடம்: பீய்ஜிங்.
துருக்கி நாட்டிற்கு வருகை தந்த கத்தார் வெளியுறவு அமைச்சர் முகமது பின் அப்துர்ரஹமான், துருக்கி அதிபர் ரீசெப் தைப்பி ஈர்டோகனை சந்தித்தார். இடம்:அங்காரா.
 
Advertisement