Advertisement

உலகம்: 10-செப்-2017

பிபா தலைவர் கிளானி இன்பான்டினோ மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர்புதின் இருவரும் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் உலக கால்பந்து கோப்பையை கையில் பிடித்தபடி சந்தித்து பேசினர்.
வாஷிங்டன் ஓவல் மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க பார்லிமென்ட் சிறுபான்மை கட்சி தலைவர் சுக் சூமர் இருவரும் சந்தித்து பேசினர்.
பிபா தலைவர் கிளானி இன்பான்டினோ உலக கால்பந்து கோப்பையை தன் முன் வைத்தபடி மாஸ்கோவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர்புதின் மாஸ்கோ நகரில் நடந்த வருடாந்திர நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகனை ஜித்தாஹ் நகரில் சந்தித்தார்.
துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன் (இடது) மற்றும் ஈரானிய அதிபர் ஹஸ்ஸான் ரவுகானி (இடது) இருவரும் கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் சந்தித்தனர்.
இத்தாலி வெனிஸ் நகரில் நடக்கும் 74வது திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் மற்றும் இயக்குநர் டகேசி கிலானோ தனது ரசிகர்களை சந்தித்தார்.
கொலம்பியாவின் வில்லாவிசென்சியோ சென்ற போப்பிரான்ஸிஸ் அங்கு கூடியிருந்த மக்களை சந்தித்து வாழ்த்தினார்.
 
Advertisement