Advertisement

உலகம்: 08-செப்-2017

ஸ்பெயின் பிரதமர் மாரியானோ ரஜோய் மாட்ரிட் நகரில் அமைச்சரவை கூட்டத்தில் பேசினார்.
ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபே (இடது) மற்றும் ரஷ்ய பிரதமர் விளாடிமிர்புதின் இருவரும் விளாடிவாஸ்டாக்கில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ரஷ்யாவிற்கு வந்த ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபே விளாடிவாஸ்டாக்கில் நடந்த ஜூடோ போட்டியை கண்டுகளித்தார்.
கிரேக்க நாட்டிற்கு சென்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் ஏதென்ஸ் நகருக்கு அருகே உள்ள பின்க்ஸ் ஹி்ல்லில் பேசினார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன் (இடது) மற்றும் கிரேக்க அதிபர் ப்ரோகோபிஸ் பவுலாபவ்லஸ் இருவரும் கிரேக்க தலைநகர் ஏதென்ஸ் அதிபர் மாளிகையில் நடந்த கூட்டத்தில் அறிக்கை விடுத்தனர்.
ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் மாரியோ திராகி நேற்று ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
கொலம்பியா போகோடா நகரில் உள்ள கார்டினல் மாளிகையின் பால்கனியில் நின்று போப் பிரான்ஸிஸ் உரையாற்றினார்.
கொலம்பியாவின் போகோடா நகருக்கு வருகை தந்த போப் பிரான்ஸிைஸ அந்நாட்டு அதிபர் ஜுவான் மேனுவல் சான்டோஸ் வரவேற்றார்.
நேபாள துணைபிரதமர் கிருஷ்ணா பகதூர் மஹாரா (இடது) மற்றும் சீன பிரதமர் லீ கியாங் இருவரும் சீன தலைநகர் பெய்ஜிங்கில் சந்தித்து கைகுலுக்கி கொண்டனர்.
பிரேசில் அதிபர் மைக்கேல் தேமர் அந்நாட்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரேசிலியாவில் நடந்த ராணுவ அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.
பிரதமர் மோடி மற்றும் மியான்மர் அரசு ஆலோசகர் அவுங் சான் சு கி கி இருவரும் யாங்கோன் நகரில் உள்ள அவுங்சான் மியூசியம் அருகே சந்தித்து பேசினர்
 
Advertisement