Advertisement

உலகம்: 10-ஆக-2017

வெனிசுலா அரசியல் சூழல் குறித்து சிலி நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹெரால்டோ மூன்ஸி, பெரு நாட்டு வெளியுறவு அமைச்சர் ரிகார்டோ லூனா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.இடம்: லிமா.
தென்ஆப்ரிக்க பார்லி.யில் நம்பிக்கை ஒட்டெடுப்பு நடந்தது. இதில் அதிபர் ஜேக்கப் ஜூமா அரசு தோல்வியடைந்தது. இது தொடர்பாக ஆளும் தென்ஆப்ரிக்க தேசிய காங். கட்சி தலைவர் விப் ஜாக்சன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இடம்: கேப்டவுன்
இந்தோனேஷியா சென்றிருந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவார்வ், செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் பேட்டியளித்தார். இடம்: ஜகார்தா.
பிரான்சின் செயின்ட் மான்டே நகரில் ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதலில் காயமடைந்த வீரர்களை அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜெரால்டு கொலம்ப் சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
வாடிகனில் வாராந்திர மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார்;
தென்ஆப்ரிக்கா பார்லி.யின் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு பின்னர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார் அந்நாட்டு அதிபர் ஜேக்கப் ஜூமா.இடம்: கேப்டவுன்.
ஜியார்ஜியாவில் இருந்து பிரிந்த அப்ஹாஸியா ரவுல் கடாசிம்பா மாகாணத்தில் நடந்த ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் டிமெட்ரி மித்வதேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மலேசியா சென்றிருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனை, மலேசிய விமான படை அதிகாரிகள் வரவேற்றனர்.இடம்: சுபாங்க்.
சீனா சென்றிருந்த கனடா வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டினா ப்ரீலாந்த், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங்க் யீயை அரசு மாளிகையில் சந்தித்தார். இடம்: பீய்ஜிங்.
ஜப்பானில் நாகாசகி நகர் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 72-வது தினத்தையொட்டி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே.
 
Advertisement