Advertisement

உலகம்: 09-ஆக-2017

சீன மக்கள் அரசியல் விவகாரங்களுக்கான உச்சி மாநாடு வடக்கு சீனாவில் துவங்கியது. மாநாட்டை அதிபர் ஜி-ஜிங்பிங்க் துவக்கிவைத்தார். இடம்: ஹோஹாட்.
இத்தாலியில் லிபியாவிற்காக ஐ.நா.விற்கான தூதர் காஸான் சலீம், இத்தாலி வெளியுறவு அமைச்சர் ஆங்கிலினோ அல்பனோ ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் இடம்: ரோம்.
வெனிசுலா பார்லி. கூட்டம் துவங்கியது. எதிர்க்கட்சி தலைவர் ஹென்றி ரோம்ஸ் ஆளும் கட்சியை குற்றம்சாட்டி உரையாற்றினார். இடம்; காரகஸ்.
மலேசியா வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனை சன்பாங்க் விமானப்படை தளத்தில் மலேசியாவிற்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
பிலிப்பைன்சில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் உச்சி மாநாடு துவங்கியது. இதில் பங்கேற்க வந்த ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டேரோ கொனோவை வரவேற்றார் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டெட்டரட். இடம்: மணிலா.
தாய்லாந்து சென்றிருந்த அமெரிக்க வெளியுறவு அமசை்சர் ரெக்ஸ் டில்லர்சன், அந்நாட்டு பிரதமர் பிரயூத்சான் ஒஜாவை சந்தித்தார். இடம்;பாங்காங்க்.
 
Advertisement