Advertisement

உலகம்: 13-ஜூலை-2017

பெல்ஜியம் சென்றிருந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவார்வேவை அரசு மாளிகையில் வரவேற்றார் பெல்ஜியம் வெளியுறவு அமைச்சர் டைடியர் ரெய்ன்டர்ஸ்.இடம்: பிரசெல்ஸ்.
அமெரிக்கா வந்திருந்த துனீஷ் அதிபர் யுசுப் சாஹட்டை வரவேற்றார் அமெரிக்க வெளியுறவு விவகரங்களுக்கான கமிட்டி தலைவர் இட்ரைஸ்.இடம்:வாஷிங்டன்.
பிரான்ஸ் நாட்டில் வாராந்திர மந்திரி சபை கூட்டம் அதிபர் இமானுவல் மெக்ரான் தலைமையில் அதிபர் மாளிகையில் நடந்தது. இதில் பங்கேற்றுவிட்டு வெளியே வரும் அந்நாட்டு அமைச்சர் செபஸ்டியான். இடம்:பாரீஸ்.
ஈரான் வந்திருந்த ஓமன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் யுசுப் பின் அல்வை, அந்நாட்டு அதிபர் ஹூசைன் ரவுகானியை அதிபர் மாளிகையில் சந்தித்தார்.இடம்: டெஹரான்.
இந்தோனேஷியாவில் புதிய இயக்கம் துவங்குவதை ஒழுங்குபடுத்தும் சட்ட திருத்த மசோதா குறித்து அந்நாட்டு சட்ட அமைச்சர் வெரிண்டோ, தகவல் தொடர்புதுறை அமைச்சர் ரூடியான்ட்ரா ஆகியோர் செய்தியாளர்களுக்கு விளக்கினர்.இடம்:ஜகார்தா.
பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பெர்டோ பிஜிமொரியி்ன் மகள் கெய்கோ பிஜிமொரி, தற்போதைய அதிபர் பெட்ரோ பப்லோ க்யூசென்ஸியை அதிபர் மாளிகையில் சந்தித்தார்.இடம்: லிமா.
கத்தார் சென்றிருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ன், கத்தர் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகம்மது பின் அப்துல்ரஹ்மான் அலி தானி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.இடம்: டோகா.
தைவான் வந்திருந்த பராகுவே நாட்டின் அதிபர் ஹோரோசியோ கார்டஸிற்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளித்தார் தைவான் அதிபர் சை இன்ங்வென்.இடம்: தைப்பி.
சிரியா விவகாரம் குறித்து ஐரோப்பியன் தலைமை அலுவலகத்தில் அந்நாட்டு எதிர்க்கட்சி பிரதிநிதி நாஸீர் அல் ஹராரி, ஐ.நா. பொதுச்செயலருக்கான சிறப்பு தூதர் ஸ்டெபான் டி மிஸ்துராவை சந்தித்தார். ஜெனீவா. சுவிட்சர்லாந்து.
பிரிட்டன் வந்திருந்த ஸ்பெயின் மன்னர் ஆறாம் பிலிப்பிற்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார் ராணி இரண்டாம் எலிசபெத்.இடம்: லண்டன்.
 
Advertisement