Advertisement

உலகம்: 12-ஜூலை-2017

வாஷிங்டனில் உள்ள ஹேப்பிட்டல் ஹில்லுக்கு சென்ற முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென்.
பிரசிலியாவில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர்.
பிரிட்டன் சென்ற ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்பால், லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் மாளிகையில் இரண்டாம் ராணி எலிசபெத்தை சந்தித்து பேசினார்.
முனிச் நகரில் உள்ள பிரைன்லேப் தலைமையகத்தில் நடந்த உத்தியோகபூர்வ திறப்பு விழாவில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் கலந்து கொண்டார்.
ஜெர்மனியின் முனிச்சில் நடைபெற்ற பவாரியன் பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்.
பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர் இம்ரான் கான், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு எதிரான கூட்டு புலனாய்வு குழுவின் அறிக்கை குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அமெரிக்கா சென்ற இத்தாலி பாதுகாப்பு துறை அமைச்சர் ராபர்ட்டா பினோட்டி,வாஷிங்டனில் உள்ள பென்டகன் சென்றார். அங்கு அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜிம் மேட்டிஷை சந்தித்து பேசினார்.
 
Advertisement