Advertisement

உலகம்: 11-ஜூலை-2017

பின்லாந்து சென்ற ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே(வலது) ஹெ ல்சின்கியில் உள்ள அதிபர் மாளிகைக்கு சென்றார். அபேக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அபே உடன் அந்நாட்டு பிரதமர் சாவ்லி நிய்னிஸ்ட்.
ஜெருசலேமில் உள்ள அதிபர் மாளிகையில் ருவாண்டா அதிபர் பால் காஹாமியை சந்திப்பதற்கு தயாரான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு(இடது) உடன் இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லின்.
உக்ரைன், கீவ் நகரில் அந்நாட்டு அதிபர் பெட்ரோ போரோஷெ ன்கோவை(இடது) நேட்டோ செயலர் ஜெனரல் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்தித்தபோது இருவரும் கைகுலுக்கினர்.
அமெரிக்கா சென்ற துனிசியா பிரதமர் யூசப் செஹெ ட், பாதுகாப்புதுறை தலைமையகமான பென்டகனுக்கு சென்றார். அவருடன் பாதுகாப்பு செயலர் ஜிம் மேட்டிஸ் உள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஐரோப்பிய தலைமையகத்தில் சிரியா பேச்சுவார்த்தை குறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த சிரியாவுக்கான ஐ.நா., சிறப்பு துாதர் ஸ்டாபன் டி மிஸ்டுரா.
டென்மார்க் சென்ற ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, கோபன்ஹே கனில் அந்நாட்டு பிரதமர் லார்ஸ் லோக்கே ரஸ்முஸனை சந்தித்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
 
Advertisement