உலகம்: 08-ஜூலை-2017
ஹாம்பர்க் நகரில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.
போலந்து தலைநகர் வார்ஷா வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலேனியா டிரம்ப் இருவரையும் அந்நாட்டு அதிபர் ஆந்த்ரேஜ் தூடாவும் அவரது மனைவியும் வரவேற்றனர்.
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நாசாவின் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வந்தார்.
மங்கோலியாவில் நேற்று நடந்த தேர்தலின் போது மங்கோலியா குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் கால்ட்மா பட்டுல்கா உல்லன்பட்டாரில் ஓட்டளித்தார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தின் ராலே நகருக்கு சென்ற இன்போசிஸ் நிறுவன தவைர் ரவிகுமார் வடக்கு கரோலினா மாகாண கவர்னர் ராய் கூப்பரை சந்தித்து பேசினார்.
ஹாம்பர்க் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன் கிளாடே யுங்கரை ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் அருகில் நின்று வரவேற்றார்.
ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பன்னாட்டு தலைவர்களுடன் ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் அவருக்கு பின்னால் நிற்பவர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் மற்றும் அவரது மனைவி.
ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வந்த உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம்மை ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் வரவேற்றார்.
வடக்கு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடந்து வரும் ஜி20 மாநாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ் இருவரிடமும் பேசினார்.
ஹாம்பர்க் நகரில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டின் முதல் நாளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே சந்தித்து பேசினர்.
வடக்கு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடந்து வரும் ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பன்னாட்டு தலைவர்கள்.