Advertisement

உலகம்: 19-ஜூன்-2017

இத்தாலி தலைநகர் ரோமில் நடந்த கோர்பஸ் டோமினி ஊர்வலத்தில் போப் பிரான்ஸிஸ் கலந்து கொண்டார்.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசேலத்தில் நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் அந்நாட்டு பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு கலந்து கொண்டார்.
முன்னாள் ஜெர்மனி அதிபர் ஹால்மட் கோல் காலமானதையடுத்து பெர்லின் அமைச்சகத்தில் உள்ள புத்தகத்தில் இந்நாள் ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் தனது அனுதாபங்களை பதிவு செய்தார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் நேற்று பாரிஸில் நடந்த அந்நாட்டு ஜெனரல் சார்லெஸ் டி கல்லேயின் 77 வது நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேலாவ்ராவ் (இடது) நேற்று சீன தலைநகர் பெய்ஜிங் வந்தார் அவரை சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ கைகுலுக்கி வரவேற்றார்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நடிகர் ஸ்டான்லி டுஸ்ஸி (வலது) நேற்று லண்டனில் நடந்த டிரான்ஸ்பார்மர்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்.
லண்டன் மாநகர மேயர் சாதிக் கான் மற்றும் அவரது மனைவி சாதியா கான் இருவரும் மேற்கு லண்டனில் உள்ள செயி்ன்ட் கிளெமென்ட் சர்ச்சிற்கு வந்தனர்.
 
Advertisement