Advertisement

உலகம்: 18-ஜூன்-2017

பிரிட்டன் இளவரிசிகள் காமிலா மற்றும் காதே நேற்று லண்டனின் பக்கிங்காம் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.
வாடிகன் நகரில் நேற்று போப் பிரான்ஸிஸ் பார்வையாளர்கள் நேரத்தின் போது ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல்லை சந்தித்தார்.
அமெரிக்க உள்துறை பாதுகாப்பு செயலாளர் ஜான் கெல்லி (வலது) மற்றும் மெக்ஸிகோ உள்துறை பாதுகாப்பு செயலாளர் மிக்குவல் ஏன்ஜெல் (இடது) இருவரும் மத்திய அமெரிக்காவி்ன் டோரல் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மியாமியில் கியூபா பாலிசி குறித்து உரையாற்றினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் அவர்களது மகன் பாரன் டிரம்ப் மூவரும் நேற்று வாஷிங்டன் வெள்ளைமாளிகையின் தெற்கு வளாகத்தில் நடந்து சென்றனர்.
ரஷ்யாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே ரஷ்ய நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்புர்க் நகரில் நடந்த கால்பந்தாட்ட போட்டியை அதிபர் விளாடிமிர் புதின் காண வந்தார். அவரை பிபா தலைவர் கியானி இன்பான்டினோ கைகுலுக்கி வரவேற்றார்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத், இளவரசர் பிலிப், இளவரசி காதே, இளவரசர் வில்லியம், ஆகியோர் லண்டன் பக்கிங்காம் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
பெல்ஜியம் பிரதமர் சார்லெஸ் மைக்கேல் (வலது) மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ் (இடது) இருவரும் நேற்று கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
 
Advertisement